தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாடு கோரவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கான உரிமைகளையே கோருகின்றது – என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான விடயங்களையே கோரிவருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல விடயங்களே எமக்கு தேவை. மாறாக நாட்டை பிளவுபடுத்தி தருமாறு கேட்கவில்லை.
நீதி அமைச்சர் வடக்கு மாகாணம் வருவதால் பிரச்சினை தீரப்போவதில்லை. சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமானால் காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்.
அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துங்கள். அதனை விடுத்து அழுத்தங்களை சமாளிப்பதற்கான நாடகங்கள் வேண்டாம்.” – என்றார்.
#SrilankaNews
Leave a comment