53 வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை வேளையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சமபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இடம் பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் வேளையில் பிள்ளைகள் தலைநகரில் பணியில் உள்ளனர் எனவும் இவர் குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் உடலை பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார் தெரிவித்தார்.
Leave a comment