rtjy 30 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்த மற்றும் பசிலுக்கு கோட்டாபய இட்ட உத்தரவு!

Share

மகிந்த மற்றும் பசிலுக்கு கோட்டாபய இட்ட உத்தரவு!

கடந்த வருடம் ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான நிலையில் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பு,தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்சவை தலைவராக தெரிவு செய்தார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் 69 இலட்ச மக்களாணையை பாதுகாக்கவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை,69 இலட்ச மக்களாணை என்பன பலவீனமடைய கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

கோவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் நாட்டில் உண்ண உணவு இல்லாமல் எவரும் நெருக்கடிக்குள்ளாகவில்லை.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள்,எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் எமது அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு, மின்விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ராஜபக்சர்களிடமிருந்தும், பொதுஜன பெரமுனவில் இருந்தும் தனித்து செயற்படுவதாக மக்களுக்கு காண்பிக்கும் வகையில் தனித்து செயற்பட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த விஜயதாஸ ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோரை இறுதி கட்டத்தில் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பசில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியில் இருந்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்தும் விலகுமாறு கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அவர்கள் பதவி விலகினார்கள்.கடந்த ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது இறுதியில் ஜனாதிபதி கோட்டாபயவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான நிலையில் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள். ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...