tamilnaadi 86 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் தவளையுடன் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீம்: நீதிமன்றம் உத்தரவு

Share

யாழில் தவளையுடன் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீம்: நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று(16.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஐஸ்கிறீமை விற்பனை செய்தவர் சுன்னாகம் பகுதியில் இயங்கும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே , ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை(14) ஆலய சூழலில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் ஐஸ்கிறீமிற்குள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ்கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் நடாத்தி செல்லப்பட்ட உணவகம் ஒன்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 36 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி ஆலயத்திற்கு தினமும் வழிபாட்டிற்காகவும் , சந்நிதி ஆலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்காகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் ஆலய சூழலில் உள்ள உணவகங்களில் சிற்றுண்டிகள் , குளிர்பானங்களை கொள்வனவு செய்கின்றனர்.

இந்நிலையில் ஆலய சூழலில் உள்ள உணவகங்கள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களின் சுகாதாரத்தை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...