தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை நடவடிக்கை

24 665d4daa2be06

தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை நடவடிக்கை

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்தார்.

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய சாரதியுடன் சம்பந்தப்பட்ட பேருந்தும் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version