3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

Share

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை இன்று (ஜூன் 16) காலை நகர மண்டபத்தில் தனது தொடக்க கூட்டத்தைக் கூட்டியது.

முதல் அமர்வின் முதன்மையான நடவடிக்கையாக, மேயரும் துணை மேயரும் தெரிவுசெய்வது திட்டமிடப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் எந்தக் கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் கடந்த நாட்களில் தங்கள் வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறி வந்தன.

கூட்டத்தின் போது, NPP கட்சி சார்பில் வ்ரை கலி பால்தசார் மேயராகவும், SJB சார்பில் ரிசா சாரூக் மேயராகவும் பெயரிடப்பட்டனர்.

மேயர் தெரிவு குறித்த வாக்கெடுப்பு முறை குறித்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தினர், மற்றவர்கள் மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சரங்கிகா ஜயசுந்தரவை திறந்த வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டனர்.

இதனால் கூட்டத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது. மேயர் தேர்வுக்கான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேயர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் மேயர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....