24 662ca87dd2773
இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறி ஆலய விவகாரம்!! பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

Share

வெடுக்குநாறி ஆலய விவகாரம்!! பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...