18
இலங்கைசெய்திகள்

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் மீண்டும் இழுபறி நிலை

Share

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களை கைப்பற்றி உள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 05 ஆசனங்கள் தேவைப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தவிசாளர்களாக முரளி மற்றும் நிலாந்தனை கட்சி தெரிவு செய்துள்ள நிலையில் இருவரில் யாருக்கு ஏனைய கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு கட்சியின் உயர்மட்ட குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அதற்கமைய கடந்த 31ஆம் திகதி தனக்கான பெரும்பான்மை ஆதரவை முரளியால் காட்ட முடியாமல் போன நிலையில் நிலாந்தன் தனக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்டகிளை கூட்டத்தில் முரளிக்கு மீண்டும் ஒரு சந்தர்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் படி முரளி எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் தனக்கான பெரும்பான்மை ஆதரவை எழுத்து மூலம் கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு காட்ட தவறினால் தனக்கான பெரும்பான்மை ஆதரவை காட்டி நிலாந்தன் கட்சி தவிசாளராக முன் நிறுத்தும் நிலையேற்படலாம் என கட்சியின் மட்டக்களப்பு மாவட்டமுக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...