வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் அக்டோபர் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், வடக்கு மாகாண இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியவற்றில் ஏற்பட்ட குழப்பகரமான தகவல்கள் குறித்து ஆளுநரால் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. அதன்படி, மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் செயலகம் வெளியிட்டது.
உண்மைக்குப் புறம்பான தகவல் குறித்த குற்றச்சாட்டுகள்:
இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதாகவும், அத்துடன் அரச சார்பு ஜே.வி.பி தொழிற்சங்கத்துடன் இணைந்து வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளும், ஆசிரியரைப் பழிவாங்கும் முயற்சிகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், “மாகாண கல்வித் திணைக்களத்தினர் தமது மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே, திரிபுபடுத்தப்பட்ட விடயங்களைத் தெரிவித்துள்ளனர்” எனவும் கூறப்பட்டுள்ளது.
“வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம்” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாகாண இடமாற்ற சபை உறுப்பினர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டவிரோதமான மற்றும் அதிகார துஷ்பிரயோக செயற்பாடுகள் அனைத்தையும் மறைத்து, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆளுநர் செயலகத்தால் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே தமது இந்த ஊடக அறிக்கை வெளியிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.புனையப்பட்டதுமான அறிக்கையின் உண்மை நிலையையும், ஜே.வி.பியின் அரசு சார்பு ஆசிரிய தொழிற்சங்கத்தினால் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் என்பதற்காக குறித்த ஆசிரியர் பழிவாங்கப்பட்டுள்ள விடயத்தையும் அறியத்தருகின்றோம்.” என அறிக்கையிவல் குறிப்பிடப்பட்டுள்ளது.