18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Share

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதிகள் பலரிடமிருந்து இதுதொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கேகாலையை சேர்ந்த சாந்த பண்டார காணாமல் போனமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், திருகோணமலை கடற்படைத் தளத்தின் நிலத்தடி அறைகள் தொடர்பில் உலுகேதென்ன சில வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில், திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள “தன்ஜன்” மற்றும் “கன்சைட்” ஆகிய நிலத்தடி சிறைச்சாலைகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அப்போதைய கடற்படைத் தளபதிகள் அறிந்திருந்தனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி நிஷாந்த உலுகேதென்ன அளித்த அறிக்கையின்படி, அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மற்றும் அட்மிரல் திசர சமரசிங்க ஆகியோர் அப்போதைய கடற்படைத் தளபதிகளாகப் பணியாற்றியுள்ளனர்.

மேலும், முன்னாள் கடற்படைத் தளபதி ஜெயநாத் கொலம்பகே, ரியர் அட்மிரலாகவும், அந்தக் காலகட்டத்தில் திருகோணமலை கடற்படை முகாமின் கிழக்குத் தளபதியாகவும் பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நிலத்தடி சிறைச்சாலைகளை ஆய்வு செய்ய அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் சோமதிலக திசாநாயக்கவிடம் அனுமதி பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் உலுகேதென்ன கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில், டி.பி. பிரேமரத்ன துணை புலனாய்வு இயக்குநராகப் பணியாற்றியதாகவும், மேலும் பிரசன்ன ஹேவகே சிறப்பு கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி சாந்த பண்டார என்ற நபரின் காணாமல் போனது தொடர்பாக நிஷாந்த உலுகேதென்ன வழங்கிய தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை தனது எதிர்கால விசாரணைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் அதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பிற மூத்த அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள “தஞ்சன்” மற்றும் “கன்சைட்” நிலத்தடி சிறைச்சாலைகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...