ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

24 66b71df904207

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் களமிறங்கவுள்ளார்.

இதன்படி திலகராஜ், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகமலையக மக்களின் பிரச்சினைகளை வெளிகொணரும் வகையிலேயே தான் இந்த தேர்தலில் போட்டியிட எண்ணியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அரியநேந்திரனின் பெயர் முன்மொழியப்பட்டிருந்த நிலையில், மற்றுமொரு தமிழ் வேட்பாளராக திலகராஜ் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version