images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

Share

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நாடாளுமன்றத்தில் இன்று (நவம்பர் 12) உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

“வரவுசெலவுத் திட்டம் குறித்து நாங்கள் பேசுகின்ற நிலையில், வடகிழக்குப் பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவது குறைவாக இருப்பதைக் காண முடிகின்றது. அந்த மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.”

கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம்: “கார்த்திகை மாதம் என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில்தான் விசேடமாக மாவீரர்களை நினைவுகூருகின்ற மாதம். அது மாத்திரமின்றி வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்ற மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.”

“இன்றைக்குப் பல தசாப்தங்களுக்கு முன்பு இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று போராடிய இளைஞர்கள் அல்லது போராடிய மக்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்களுடைய எதிர்பார்ப்பு, ஆசைகள், அபிலாஷைகள் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

“அங்கிருக்கின்ற மக்கள் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் அந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடியிருந்தால், இன்றைக்கு அந்த மக்களினுடைய கனவினை நனவாக்குகின்ற செயற்பாடுகளை எந்த ஒரு தமிழ்க் கட்சியாவது, எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகங்களைச் செய்கின்றார்களா என்பது கேள்விக்குறியான விடயம்,” எனத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...