tamilnadu 4
இந்தியாஇலங்கைசெய்திகள்

டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

Share

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களைக் கப்பல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 தொன் (Metric Tons) நிவாரணப் பொருட்கள் இலங்கை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளில் மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளன.

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை (டிசம்பர் 6) பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்கத் தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டிருந்தார்.

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த உதவி நடவடிக்கை, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்துவதாக உள்ளது. மேலும், தமிழக அரசு தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...