25 1
இலங்கைசெய்திகள்

உயிரியல் பாட வினாத்தாளில் தொடரும் பிழைகள் – பிரதமரிடம் சுட்டிக்காட்டிய வன்னி எம் பி.

Share

உயர்தர உயிரியல் பாட வினாத்தாள் காணப்படும் பிழைகள் தொடர்பில்’ பிரதமர் ஹரிணியிடம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் (Pathmanathan Sathiyalingam) சுட்டிக்காட்டியுள்ளதுடன் விரைவில் தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (11.1.2025) பிரதமருடன் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போதே குறித்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகத்தின் (University of Vavuniya) வசதியீனங்கள், பணியாளர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தேவையான கட்டுமான தேவைகள் மற்றும் மாணவர்களின் நோக்கும் விடுதியின்மை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது கல்வி அமைச்சர் என்ற முறையில் எடுத்துக்கூறியிருந்தேன்.

மாணவர்களின் விடுதிப்பிரச்சனைக்கை உடனடி தீர்வாக பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி இருப்பதன் காரணமாக அங்கு காணப்படும் பாரிய கட்டடங்களில் மாணவர் விடுதியை தற்காலிகமாக இயக்குவதற்கான இயலுமைகள் தொடர்பிலும் குறித்த இடத்தை வனவள திணைக்களத்தில் இருந்து விடுவிப்பது தொடர்பிலும் பிரதமரோடு இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை உயர்தர பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாளில் தொடர்ந்தும் அதிகமான பிழைகள் காணப்படுகின்றமை தொடர்பிலும் கல்வி அமைச்சர் என்ற முறையில் சுட்டிக்காட்டியதோடு இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்திருந்தார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...