tamilni 198 scaled
இலங்கைசெய்திகள்

திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல்: கண்டித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Share

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதலை கண்டிக்கின்றோம் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களது உருவம் தாங்கிய ஊர்தி மீது நேற்று (17.09.2023) மாலை, திருகோணமலை, கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருக்க இனவெறி கொண்ட காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தியாகி திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காய் காந்தியை விஞ்சிய வகையில் அகிம்சை வழியில் போராடிய போராளியாவார். அவரின் தியாகங்கள் என்றென்றும் அனைவராலும் மதிக்கப்படுவதடன், சர்வதேசத்தினால் அவரது தியாகம் வியந்து பார்க்கப்படுகின்றது.

ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சவால்களை உலகறியச்செய்த பார்த்தீபனின் தியாகத்தினை கண்டு சிங்கள பௌத்த தேரர் ஒருவர் கடந்த வருடம் கவிதை இயற்றியிருந்தமை யாவரும் அறிந்ததே.

இவ்வாறான பெருமை மிக்க பெருந்தகையின் திருவுருவப்படத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட இனவெறித்தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதுடன் எமது நினைவேந்தல் உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலும் இவ்வூர்தியில் சென்றுகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் சிறப்புரிமை கொண்ட, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழலில் உள்நாட்டுக்குள் விசாரணை தீர்வு என்பவை சாத்தியமற்றது என்று நாம் தொடர்ந்து கூறிவருவதன் காரணங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...