rtjy 11 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் சர்ச்சை

Share

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Jurist என்பது சட்டம் மற்றும் நீதி தொடர்பான சர்வதேச இணையத்தளமாகும்.

நீதிபதியின் பதவி விலகல் கடிதம் கடந்த வியாழன் அன்று ஒன்லைனில் பரப்பப்பட்டதாக Jurist இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தனது தொழில் வாழ்க்கை மீதான அதிக அழுத்தங்கள் காரணமாக தாம் வகிக்கும் அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கிய பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவை மாற்றுமாறு கடந்த மாதம் 21ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தம்மை அலுவலகத்திற்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்ததாக டி.சரவணராஜா குற்றஞ்சாட்டியதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு தொடர்பிலான முன்னாள் அமைச்சர் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட்டதாகவும், புலனாய்வுப் பிரிவினர் தம்மை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் நீதிபதி டி.சரவணராஜா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் பதவி விலலுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...