28 3
இலங்கைசெய்திகள்

வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்

Share

வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணத்தில் (jaffna) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலில் இருக்கும் நிலையில் இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.

சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு நேற்று காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...