24 66c9cc3424de7 1
இலங்கை

தமிழ் பொது வேட்பாளர் : தென்னிலங்கைக்கு ஏற்பட்ட அச்சம் : அம்பலப்படுத்தியது ரெலோ

Share

தமிழ் பொது வேட்பாளர் : தென்னிலங்கைக்கு ஏற்பட்ட அச்சம் : அம்பலப்படுத்தியது ரெலோ

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி(suren kurusami) தெரிவித்தார்.

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (24) இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்(selvam adaikalanathan) தலைமையில் இடம்பெற்றது. கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சம்மந்தமான விடயங்களை எப்படி கொண்டு செல்வது என்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதன் காரணமாக தென்பகுதியில் ஏற்படுகின்ற அழுத்தங்களினால் தென்பகுதி வேட்பாளர்களிடமிருந்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களும், கோரிக்கைகளும் வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக வருகின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் இவ் மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன் ஊடாக பொது வேட்பாளரையும், பேச்சுவார்த்தைக்காக எமக்கு வருகின்ற அழைப்புக்களையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான அனுமதியினையும் ஆலோசனையை மத்திய குழு கூட்டத்தில் எடுத்துக் கொண்டோம்.

பொது வேட்பாளரை விடுவது என்பதற்கான சாத்தியம் இல்லை. எமக்கு அழைக்கின்ற பேச்சுவார்த்தைகளில் எமது மக்களுக்கான கோரிக்கைகள் அதாவது எதற்காக பொது வேட்பாளரை களமிறக்கினோமோ அல்லது எந்த விடயங்கள் நிறைவேறவில்லை என பொது வேட்பாளரை களம் இறக்கினோமோ, அக்கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியது எமது மக்கள் நலன் சார்ந்து எமது கடமையாகும்.

ஆகவே இவ்விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பான முடிவினை இன்று எடுத்து இருந்தோம். பொது வேட்பாளர் இல்லாது நடத்தப்படும் பேச்சுவார்த்தை என்பது நாங்கள் வளைந்து சென்று அவர்களிடம் கையேந்துகின்ற நிலைமையை ஏற்படுத்தும்.

ஒரு வேட்பாளரை களம் இறக்கிய பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் அதாவது தெற்கிலே இருக்கின்ற வாக்குகள் சமமாக பிரிக்கப்படுகின்ற போது குறித்த பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகபட்ச வாக்குகளை வழங்கினால் அதன் ஊடாக தங்களுக்கு ஏற்படுகின்ற நிலைமை குறிப்பாக இரண்டாவது வாக்கு எண்ணும் நிலையில் கூட வெற்றியடைய முடியாது என்ற நிலைமையை அவர்கள் உணர்கின்றனர்.

ஆகவே பொது வேட்பாளரை களம் இறக்கியதன் மூலம் எமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்குப் பின்னராக அவர்களிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதன் ஊடாக நாங்கள் ஒரு பலமான நிலைமையில் இருந்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக கட்சியிலே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இருப்பினும் கட்சி எடுத்த ஒரு பொது முடிவிலேதான் நாங்கள் அனைவரும் பயணிக்கின்றோம்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...