8 47
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை குறித்த ஜனாதிபதியின் பதில்: எழுந்துள்ள கடும் விமர்சனம்

Share

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் ஜனாதிபதியின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபாகுகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணியில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தனிநபர் சட்டத்தை மீறி சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நீதி வழங்குமாறு ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் அதற்கு ஆதரவு வழங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் பார்த்து மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிக்கின்றனர் என அப்பட்டமான பொய்யுரைக்கும் ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே தமிழர் தாயகப்பகுதியில் அரச சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்க முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் இதுவரை அரச இயந்திரம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளும் மத ஆக்கிரமிப்பு, இனவாத ஆக்கிரமிப்பு போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி ஆதரிக்கின்றாரா?

அநுர அரசாங்கம் தமிழர் தாயகத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாகாணத்திற்கும் தமிழர்களுக்கம் தொடர்புகள் இல்லை என்ற உள்நோக்கில் மறைத்து வடக்கு மாகாணம் என்ற உரையாடலை முதன்மைப்படுத்துகின்றனர்.

ஜனாதிபதி சட்டவிரோத நடவடிக்கைக்கு நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக என்ன செய்வேன் என சொல்வதற்கு முதுகெலும்பற்று வடக்கு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வு வழங்குவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.

ஆகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தின் ஆட்சியை அரச இயந்திரத்தின் மூலம் வழங்கும் இயலுமையை ஜனாதிபதி வழங்க தயார் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...