யாழ்ப்பாணம் – பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு! – மருதனார்மடத்தில் சம்பவம்

police

யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவம் பொலிஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரைக் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பழக்கடை வியாபாரி கழுத்து மற்றும் காலில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.

Exit mobile version