யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு

tamilni 425

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று (19.02.2024) இரவு நடத்தப்பட்டுள்ளது .

இந்நிலையில், காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version