வட்டியில்லா கடன் பெறும் வாய்ப்பை இழந்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள்

tamilni 195

வட்டியில்லா கடன் பெறும் வாய்ப்பை இழந்துள்ள 1200 மாணவர்கள் தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (11.01.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சியின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய மீண்டும் நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

என்றாலும் Horizon மற்றும் Katsu International University (KIU) கல்வி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1200 மாணவர்களுக்கு இந்த வட்டியில்லா கடனாக ரூபா 8 இலட்சத்தை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த வட்டியில்லாக் கடனைப் பெற்ற சில மாணவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதைக் கருத்திற் கொண்டு, இந்த மாணவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பது நியாயமற்ற செயல். இது தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

இப்பல்கலைக்கழகங்களில் பதிவு செய்த பிறகு கடன் வசதி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பில் கல்வி அமைச்சு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் குறித்த கல்வி நிறுவனங்களுக்கு இடையில் முத்தரப்பு கலந்துரையாடல் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version