மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பாணந்துறைப் பிரதேச குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (டிச 4) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பர மில்லேவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர். சந்தேகநபரிடமிருந்து 1062 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (காய்ச்சல்) கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகஹஹேனப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேனப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

