24 666507230cd56
இலங்கைசெய்திகள்

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்

Share

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்

விசேட வைத்தியர்களின் கடுமையான பற்றாக்குறையினால் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் இரண்டாயிரம் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை நான்காயிரம் எனவும், தற்போது 2150 விசேட வைத்தியர்கள் மாத்திரமே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சத்திரசிகிச்சை நிபுணர்கள், குழந்தை நல வைத்தியர்கள், இரத்தம் ஏற்றும் நிபுணர்கள், பாலியல் நோய் வைத்தியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் விசேட வைத்தியர்கள் நாடு திரும்பமாட்டார்கள் எனவும், அவர்களை நாட்டில் தக்கவைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு போதிய வருமானம் இல்லாமை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகளே பிரதான காரணம் என சுகாதார அமைச்சின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...