25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

Share

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் (உச்ச நீதிமன்றம்) முக்கியமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம், கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி இரவோடு இரவாக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தச் செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் கண்டனத்துக்கு உள்ளாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

“சைவத்துக்கும், தமிழுக்குமாகத் தொடங்கப்பட்ட பாடசாலை” என்ற வகையில், பாடசாலையின் பண்பாட்டைப் பேணும்பொருட்டு, இந்தச் செயற்பாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை அந்த நிலையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவில் சிவலிங்கத்தை வேறு எந்த இடத்துக்கும் மாற்றப்படக் கூடாது, மற்றும் அது தொடர்பான வேலைகள் செய்யப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...