gota
இலங்கைஅரசியல்செய்திகள்

நிரந்தர முகவரிகளைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு: முன்னாள் ஜனாதிபதி உட்படப் பல முக்கிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Share

‘அரகலய’ போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) பரிசீலித்தது.

இதன் அடிப்படையில், மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ஆறு முக்கிய அதிகாரிகள் உடனடியாகத் தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளைச் சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, சோஹித ராஜகருணா மற்றும் மேந்தா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகவரிகளைச் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அதிகாரிகள் பின்வருமாறு:
கோட்டாபய ராஜபக்ச – முன்னாள் ஜனாதிபதி
ஜெனரல் கமல் குணரத்ன – முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
சி.டி. விக்ரமரத்ன – முன்னாள் காவல்துறை மா அதிபர்
நிஷாந்த உலுகேதென்ன – முன்னாள் கடற்படை தளபதி
பிரசன்ன ரணதுங்க – முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்
டிரான் அலஸ் – முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...