சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு (Super Delta) கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பரவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நிறுவனத்தால் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பாக மேற்கொண்ட பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாட்டில் சில பகுதிகளில் டெல்டா வைரஸின் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவிடயம் குறித்து பல்கலைகழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பதிலளிக்கையில், வைரஸ் தொற்று பரவும் வேகத்தை அவதானிக்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே அதனை உறுதிப்படுத்த எமது பரிசோதனை குழு பரிசோதனை மேற்கொண்டு, ஒரு வாரத்துள் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார்.