8
இலங்கைசெய்திகள்

சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க தயார்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

Share

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சமையலறையில் கரப்பான் பூச்சிகள் , எலிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை நியமிக்கும் செயற்பாடொன்றை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி முன்னின்று மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் பிக் குச்சன் ஒருவர் அடுத்தவர்கள் எதைக் கேட்டாலும் உனக்கு பாணா என்று கேட்பதாகவும் அவ்வாறு தொடர்ச்சியாக கேட்பதன் அர்த்தம் அவர் ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதாகும் என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில், சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் இருந்து அரசி, வாழைக்குலை, தேங்காய்களை அன்பளிப்பாக பெற்று வாழ்ந்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாகி இருப்பதாகவும் , அவர்களுக்கு தங்களிடமிருந்த அரிசி, தேங்காய் உள்ளிட்டவற்றை அள்ளிக் கொடுத்த பொதுமக்கள் தற்போதைக்கு பஞ்சப் பரதேசிகளாக ஆகியிருப்பதாகவும் அர்ச்சுனா ராமநாதன் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

தனது தகப்பனார் யாழ்ப்பாணத்தின் பூர்வீக கோடீஸ்வரர் என்பதன் காரணமாக தன்னிடம் 15 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒரு பகுதி தான் மருத்துவத்துறை மூலம் உழைத்துக் கொண்டதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...