tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிற்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி!

Share

கோட்டாபயவிற்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி!

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய சுகீஸ்வர, அண்மையில் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேலும் கூறுகையில், கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பி வைத்த பிரதான சூழ்ச்சிதாரி, அப்போதைய ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எவரும் சந்திக்க விடாது ஜெனரல் எகடவெல முடக்கினார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் சாவேந்திர சில்வா ஆகியோரும் சதியில் இணைந்து கொண்டிருந்தனர் எனவும் அவர்களும் நாடகமாடியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டாபயவின் மிரிஹான வீட்டை சுமார் 150 முதல் 180 பேர் வரையில் முற்றுகையிட்டனர்.

முஸ்லிம் சமூகத்தினர் கோட்டாபயவை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...