11 1
இலங்கைசெய்திகள்

சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி

Share

சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.

ரணில்(Ranil Wickremesinghe) மற்றும் சஜித்(Sajith Premadasa) தரப்புகளுக்கு இடையிலான முறுகல் அதிகரித்துள்ளதுடன், கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் நிலைப்பாடும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சஜித் அணியில் இருந்து வெளியேறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் உரை ஒன்றினால் அந்த அணிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சஜித் தரப்பில் இருந்து ரணில் பக்கம் தாவ பலர் திட்டமிட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதனை தடுக்கும் வகையில் சஜித் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில வாரங்கள் உள்ள நிலையில் கட்சிக்குள் குழப்ப நிலையை ஏற்படுத்தும் உறுப்பினர்களை அடையாளம் காணும் சிறப்பு வேலைத்திட்டதை சஜித் ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகும் வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக சஜித் பிரேமதாச முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக சஜித் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தாவல்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த நிலையில், தலதா அத்துக்கோரளவின் உரையால், சஜித்தின் ஜனாதிபதியாகும் கனவு கலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் கடும் போட்டித்தன்மை நிலவுகிறது.

இவ்வாறான நிலையில் சஜித் அணிக்குள் ஏற்படும் புதிய பிளவுகளால் அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு அது பாரிய நன்மையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...