நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டிருந்த படகுப் பாதையானது நீரில் மூழ்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் வீசிய கடும் காற்றின் வேகத்தினால், கடல்நீர் படகு பாதையின் உள்ளே சென்றதால் குறித்த படகுப் பாதை இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளது.
இந்த படகுப் பாதையானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாக காணப்படும் நிலையில் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.