24 65fe375de6bc0
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை சாடிய ரஞ்சித் மத்தும பண்டார

Share

அரசாங்கத்தை சாடிய ரஞ்சித் மத்தும பண்டார

பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என பொய்யுரைக்காமல் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆனால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளோம் என்று பொய்யுரைக்காமல், நெல்லை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படாமல் இருப்பது விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளின் செலவுக்கு ஏற்றாட் போல் நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும். ஆகவே நெல் கொள்வனவுக்கு அரசாங்கம் விசேட பொறிமுறைகளை செயற்படுத்த வேண்டும்.

நெல் அறுவடை செய்யும் காலத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதில்லை.ஆனால் இந்த ஆண்டு மாத்திரம் 30 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய உற்பத்திகளை நெருக்கடிக்குள்ளாக்கி மொத்த இறக்குமதியாளர்கள் பயனடையும் வகையில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்தது.

இரசாயன பசளைக்கு பதிலாக சேதனத்திட்டத்தை நடைமுறைபடுத்தியதால் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். உலகில் எந்த நாடுகளும் எடுக்காத தீர்மானத்தையே ராஜபக்ச அரசாங்கம் செயற்படுத்தியதால் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...