ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 21 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள போதை உருண்டைகளுடன் கந்தளாய் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கந்தளாய் நகரில் ஆயுர்வேத மருந்து கடை நடத்தி வந்துள்ளார். பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டை விற்பனை செய்து வந்தார்.
சோதனையின் போது, 8 அட்டைப் பெட்டிகளில் 10,920 போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருட்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.