இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்

tamilni 274

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்

கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி எதிர்கொண்ட ஆபத்தான நிலைமை தொடர்பில் கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமி 13 வயது முதல் பாலியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக அவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது அத்தைகளில் ஒருவரின் தலையீட்டில் இந்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 09 பேர் குடும்ப உறுப்பினர்களாகும். இந்த 10 பேரில் ஒருவர் குடும்ப உறுப்பினர் அல்லாத திருமணமான ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவி வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி மாணவியை உறவினர் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலதிக விசாரணையில் இந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து தகவல்களையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது, ​​பொலிஸார் அவரை மருத்துவரிடம் ஒப்படைத்து அறிக்கை பெற்றுள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, இந்த மாணவி எப்படி பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version