போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்

rtjy 340

சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(30.10.2023) நண்பகல் 12 மணியளவில் இடம்பெறும் என அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள அதிகரிப்பை கோரியே நாடளாவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அந்த சங்கங்களின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவை மற்றும் மாகாண அரச சேவை என பல சங்கங்களின் அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version