14 13
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு காலநிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை

Share

நாட்டு மக்களுக்கு காலநிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (28) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் உள்ள நெடுநாள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30 – 40 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 43aa3a17db
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்: 43% வாகன ஓட்டுநர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமை!

கொழும்பு மாநகரப் பகுதியில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் ‘ஐஸ்’ (Crystal...

image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

  நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம்...

Dailynews650 19
செய்திகள்இலங்கை

EPF நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை – தவறான செய்திகளுக்குத் தொழில் அமைச்சு உத்தியோகபூர்வ விளக்கம்!

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பாகத் தொழில் பிரதி...

chamara3
இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக் குறைக்கவும் – நாடாளுமன்றில் சாமர சம்பத் கோரிக்கை!

நாட்டில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் நோக்கில், மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக்...