அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளைப்பெற்று இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளது.
இந்நிலையில், எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் என கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாடு தற்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியால் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசாங்கத்துடன் நட்புறவு கொண்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொது மற்றும் தனியார் பணத்தை செலவிட்டு பதவியேற்பு விழாக்களை நடத்தக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- news from sri lanka
- news in sri lanka today
- Ranil Wickremesinghe
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- sri lankan news
- Sri Lankan political crisis
- Srilanka Tamil News
- tamil lanka news
- tamil sri lanka news
- tv news
Leave a comment