30 1
இலங்கைசெய்திகள்

சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்த சிறீதரன்

Share

சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்த சிறீதரன்

வவுனியாவில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் பின் ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமர்ந்து கொண்டு குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை அழைத்துள்ளார்.

ஆனால் அவர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.

இதன்போது, பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் அழைத்து இருந்தார்..ஆனால் அவர் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் ரஞ்சினி ஆகியோர் சிறீதரனை கையால் பிடித்து இழுத்து அமருமாறு கோரிய போதும் அவர் அதை ஏற்காது அஙகிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...