10 11
இலங்கைசெய்திகள்

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை.!

Share

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை.!

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan), மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் விசமப் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக இன்றையதினம் (08) கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும் பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றையதினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன.

அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன்.

இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள்.

அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...