இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் துதிபாடுவோரை உடனடியாக சிறை

Share
rtjy 43 scaled
Share

விடுதலைப்புலிகளின் தலைவர் துதிபாடுவோரை உடனடியாக சிறை

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை துதிபாடுவோரை அரசு உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என சிங்கள கடும்போக்குவாத நாபாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கில் உள்ள ஒரு தரப்பினரும் , புலம்பெயர் தமிழ் மக்களும் தேசியத் தலைவராக புகழ்ந்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் முழுமூச்சாக தங்களுக்கு வாக்குப் பிச்சை கேட்கப் பிரபாகரனைப் பகிரங்கமாகத் துதிபாடிவருவது வழமை.

இந்நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் அல்லது பிரதமராக வரவேண்டும் என்ற கனவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது பிரபாகரனைத் துதிபாடியுள்ளார்.

இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்து, சொத்துக்களை நாசப்படுத்தி பிரபாகரன் உருவாக பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ காரணம் அல்லர் என்பதை மைத்திரிகளோ அல்லது சிங்கள மக்களோ புரிந்துகொள்ள வேண்டும்.

பிரபாகரனிடம் இருந்த பயங்கரவா குணத்தாலும் அவரிடம் இருந்த இனவெறியாலுமே அவர் அரச படைகளுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கினார்.

நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யவிட்ட அவர், இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது படையினரின் தாக்குதலில் மரணத்தைத் தழுவினார்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இனிமேல் யாரும் துதிபாடினால் அவர்களை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...