11 19
இலங்கைசெய்திகள்

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

நாட்டின் சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்க ஆபரணங்களை அடகு வைத்தும் சொத்துக்களை விற்றும் மக்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வதாக ஆய்வொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

அத்துடன், 32% குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

உணவு அடிப்படையிலான தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு முல்லைத்தீவு (Mullaitivu), மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம், புத்தளம், கொலன்னாவ மற்றும் மஹரகம ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் இருந்து 1352 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, சொத்துக்களை விற்று கடனுக்கு பணம் எடுத்தல் போன்றவற்றின் மூலம் உணவுக்கு பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...