இலங்கையின் கடன் தொடர்பில் வெளியான தகவல்
சர்வதேச (fitch) பிட்ச் மதிப்பீடுகள், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய (LTLC) வழங்குபவர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR), ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைத்துள்ளது.
அத்துடன் உள்ளூர் நாணயப் பத்திரங்களின் வெளியீட்டு மதிப்பீடுகளும் ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
நீண்ட கால வெளிநாட்டு நாணயம் (LTFC) IDR ஆனது ‘RD’ மற்றும் நாட்டின் உச்சவரம்பு ‘B’ தரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின் கீழ் இலங்கை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே பிட்ச் இன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

