ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு

15 25

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.

பொது அழைப்புகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 12,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகள், சந்தைகளில் வளர்ச்சியின் மத்தியில், இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 2025,மே 20–23 வரையான திகதிகளில், பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றன.

அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கான இறுதி நேர்காணல்கள், கட்டுநாயக்காவில் உள்ள விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version