அவுஸ்திரேலியாவில் சிக்கிய விமானத்தை மீட்க சென்ற இலங்கை குழுவினர்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய இலங்கை விமானத்தை மீட்பதற்காக இந்தகுழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
விமானம் மெல்பேர்னிலிருந்து கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக செயற்பட்ட விமானிகள் குறித்த விமானத்தை மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர்.
விமானம் மீட்கப்படும் வரை பயணிகளுக்கு விடுதியில் தங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Comments are closed.