24 662706e1a289c
அரசியல்இலங்கைசெய்திகள்

மைத்திரி தரப்பு வகுக்கும் வியூகம்! சு.கவைக் கைப்பற்ற போட்டி

Share

மைத்திரி தரப்பு வகுக்கும் வியூகம்! சு.கவைக் கைப்பற்ற போட்டி

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினை காரணமாக அக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு மூன்று தரப்பினர் களத்தில் இறங்கியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு மற்றும் தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு போன்றன இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் அரசோடு இணைந்து நிற்பதன் காரணமாக அவர்கள் மூவரையும் சு.கவில் வகித்த பதவிகளில் இருந்து மைத்திரிபால சிறிசேன நீக்கினார். இதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றம் சென்றனர்.

மைத்திரிபால கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அவர்கள் மூவரும் சந்திரிக்காவின் விசுவாசிகள். சந்திரிக்காவே கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று அவர்கள் பாடுபடுகின்றார்கள்.

அதேபோல், சு.கவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மைத்திரியால் நீக்கப்பட்ட தயாசிறி தயசேகர இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி கட்சிக்குள் இருக்கும் அவரது விசுவாசிகளுடன் இணைந்துகொண்டு கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று அறியமுடிகின்றது.

நீதிமன்றத் தடை நீங்கியதும் மைத்திரியே மீண்டும் தலைவராக வருவார். அந்தத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மைத்திரி தரப்பு வியூகம் வகுத்து வருவதையும் அறியமுடிகின்றது. இவ்வாறு மூன்று தரப்பினர் சு.கவைக் கைப்பற்றுவதற்குக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையைக் காண முடிகின்றது.

நீதிமன்றத் தடை நடைமுறையில் இருப்பதால் மேற்படி மூன்று தரப்புக்களில் சந்திரிக்கா அணி, சு.கவின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமித்துள்ளது. அதேவேளை, மைத்திரி அணி, சு.கவின் பதில் தலைவராக விஜயதாஸ ராஜபக்சவை நியமித்துள்ளது. பதில் தலைவர் நியமனங்களால் சு.க. பிளவு அணிகளுக்குள் முரண்பாடு வலுத்துள்ளது.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...