பலாக்காய் விலையில் மாற்றம்

tamilnih 89

பலாக்காய் விலையில் மாற்றம்

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், பலா, ஈரப்பலா போன்றவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அத்துடன், கிழங்கு மற்றும் வற்றாளை போன்ற உணவுப்பொருட்களின் விலையையும் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் இவ்வாறான காய்கறிகளை கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றமையே இந்த விலை உயர்விற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், ஈரப்பலா காய் ஒன்று 180 ரூபாவுக்கும், வாழைக்காய் 280 ரூபாவுக்கும், வாழைப்பூ 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், பொன்னாங்கண்ணி கீரையும் வல்லாரை கீரையும் 60 ரூபா முதல் 80 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Exit mobile version