Picsart 23 06 20 20 50 31 208
இலங்கைசெய்திகள்

இலங்கையை கண்டு ரசித்த பிரித்தானிய பிரபலங்கள்

Share

இலங்கையை கண்டு ரசித்த பிரித்தானிய பிரபலங்கள்

திருகோணமலையில், சுற்றுப்பயணக் குழுவினர் மனதை மயக்கும் டால்பின்களைக் கண்டுகளித்ததுடன் புறா தீவிற்கு படகு சவாரி செய்து, அதன் இயற்கை அழகையும் கோணேஸ்வரம் கோயில் மற்றும் நிலாவெளி கடற்கரைக்குச் சென்று இலங்கையின் கிழக்குக் கடற்கரையின் அழகையும் ரசித்தனர். நுவரெலியாவிற்கு அவர்கள் சென்றபோது, கந்தபொலவில் இருந்து பருத்தித்துறை தோட்டத்திற்குசெல்லும் The Pekoe Trail என்னும் புதிய சுற்றுலா அனுபவம் மூலம் தேயிலை தோட்டங்கள் முதலான இயற்கைக் காட்சிகளைக் காணும் வாய்ப்பும், பருத்தித்துறை தேயிலை தொழிற்சாலையில் தேயிலை பதப்படுத்துதலை காணும் மற்றும் பல்வேறு வகை தேயிலைகளை ருசிக்கும் அனுபவமும் கிடைத்தது.

நுவரெலியாவிலிருந்து எல்ல வரையிலான இயற்கை எழில் சூழ்ந்த ரயில் பயணம் அவர்களுக்கு எல்லா பாறை உட்பட, பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்கியது. இந்தப் பயணம் முழுமையும், இலங்கை மக்களின் வளமான உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் தங்களை மூழ்கடிக்கும் வாய்ப்பை இந்த குழுவிற்கு வழங்கியது. திஸ்ஸவில், திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாரை நடத்திய பிரமாண்டமான மத ஊர்வலமான, பிரமிக்க வைக்கும் இலங்கையின் பொசன் போயா பெரஹெரா நிகழ்ச்சியைக் கண்டு, இலவச உணவுக் கடைக்கு (தன்சல்) சென்று ருசியான இலங்கை உணவு வகைகளை சுவைத்து, இலங்கையர்களின் அரவணைப்பை அனுபவித்தனர். அத்துடன், பௌத்தம் மற்றும் பௌத்த தத்துவம் குறித்து ஆலய பிரதமகுரு வழங்கிய ஆழ்ந்த பிரசங்கம் ஒன்றையும் அவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

 

மேலும் , இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் மீன் சந்தைகள், நறுமண மசாலா தோட்டங்கள் வரை ஹிரிவடுன்னவில் சமையல் செயல்விளக்கம் வரை, தீவின் தனித்துவமான சுவைகள் மற்றும் சமையல் மரபுகளை வெளிப்படுத்தும் சுவையான சமையல் அனுபவங்களையும் அனுபவித்தனர். தலைநகர் கொழும்பில் நிறைவடைந்த சுற்றுப்பயணம், இலங்கை உணவக உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா மண்டலங்கள், குறிப்பாக நீர்கொழும்பு, சிகிரியா, காலி மற்றும் கண்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் நிலையான சுற்றுலா முயற்சிகள் குறித்தும் நன்கு விளக்கியது.

குழுவினர், சுற்றுப்பயணத்தின்போது அனுபவித்த தங்கள் அனுபவங்களை தங்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதால், அது பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை புரிய உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...