tamilnig 15 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணிலிற்கு பெருகும் ஆதரவு

Share

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணிலிற்கு பெருகும் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி ஒன்றின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்படவுள்ள கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதனை முன்வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவை வழங்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தலில் நிமல் லான்சா, சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வடக்கில் சி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுக்கள் இதுவரை தமது ஆதரவினை அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்காக மேலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக எதிர்வரும் பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டில் அதிக கூட்டணிகளை கொண்ட தேர்தலாக மாறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...