rtjy 101 scaled
இலங்கைசெய்திகள்

பாரிய வங்கி கடனட்டை மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Share

பாரிய வங்கி கடனட்டை மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை தபால் திணைக்களத்தினை போன்ற போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.

இவ்வாறான மோசடி ஈடுபடும் நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம். ஆர்.பி.குமார மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பண மோசடிச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு நிகரான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் வங்கி அட்டைகள் தொடர்பான தகவல்களை பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் திணைக்களம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்துவதில்லை என வலியுறுத்தியுள்ளது.

தபால் திணைக்களத்தின் இணைய முகவரியும் மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...

Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...