கொழும்பு அரசியலில் குழப்பம்! வெளியேற்ற பெரும் சதி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து வெளியேற்ற பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியில் இருந்து தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் குழு இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அவரது தொகுதியான பதுவஸ்நுவர பிரதேசத்தில் நடைபெறவிருந்த மாநாட்டு நிகழ்வு கொழும்பிற்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் தயாசிறி ஜயசேகர கட்சியை ஒன்றிணைப்பதை விட அமைப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
2 Comments